இந்தியா

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: விமானம் பாட்னாவில் தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது,

DIN


புதுதில்லி: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். 

வியாழக்கிழமை தில்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் அவரது பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. பயணி கைது செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர்.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறன்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனைத்து கட்சிக் கூட்டம்! தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணிப்பு! | DMK | SIR

பிக் பாஸ் 9: இதுதான் உங்கள் தராதரமா? திவாகரை எச்சரித்த விஜய் சேதுபதி

இது எதிர்காலத்திற்கு ஆபத்து: நிவேதா பெத்துராஜ்

பிகாரில் தேர்தல் பிரசாரத்திற்கு மத்தியில் மீன்பிடித்த ராகுல் காந்தி

ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் கடாய்! போக்குவரத்து விதிகளை மீறாத இளைஞர்!

SCROLL FOR NEXT