இந்தியா

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிடுவோம்: மோடி வேண்டுகோள்

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுதோறும் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

DIN


புதுதில்லி: ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுதோறும் மூவர்ண தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாட்டின் 75 ஆவது சுதந்திர நாள் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் 75 ஆவது சதந்திர நாளை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. 

அதன்படி, ஹர் கர் ட்ரையாங்கா இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சுதந்திர நாளை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,  இந்த ஆண்டும் நாம் அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற  பெயரில் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், அதை ஹர் ஹார் ட்ரையாங்கா(ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். 

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை நாட்டு மக்கள் ஊங்கள் வீடுகளில் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிடுங்கள். இந்த இயக்கம் தேசியக் கொடியுடனான நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று, ஜூலை 22 நமது வரலாற்றில் ஒரு சிறப்பான நாள். 1947 ஆம் ஆண்டு இதே நாளில்தான் நமது தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நமது மூவர்ணக் கொடி மற்றும் பண்டிட் நேருவால் ஏற்றப்பட்ட முதல் மூவர்ணக் கொடியுடன் தொடர்புடைய குழுவின் விவரங்கள் உள்பட வரலாற்றில் இருந்து சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரானுடன் உறவை முறித்த ஆஸ்திரேலியா! தூதர் வெளியேற உத்தரவு!

காதலே காதலே... ஐஸ்வர்யா லட்சுமி!

நொய்டா வரதட்சிணை கொலையில் திடீர் திருப்பம்: நிக்கியின் கணவர் மீது ஏற்கனவே வழக்கு!

4 ஆண்டு தடைக்குப் பின்... ஒருநாள் அணிக்குத் திரும்பும் ஜிம்பாப்வே ஜாம்பவான்!

வெள்ளத்தில் மூழ்கிய 170 கிராமங்கள்: ஒடிசாவில் 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT