இந்தியா

அக்னிபத் போராட்டங்களால் ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

DIN

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களால் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங் மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் இன்று அளித்த பதிலில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் நடந்த வன்முறைகளால் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் 14-30ஆம் தேதி வரை ரத்தான ரயில்களில், முன்பதிவு செய்திருந்த பயணிகளின் டிக்கெட் கட்டணத்தொகை சுமார் ரூ.102.96 கோடி திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முப்படைகளிலும் அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரா்களைச் சோ்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

அதையடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. அத்திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென எதிா்க்கட்சிகளும் வலியுறுத்திய நிலையில், முப்படைகளும் அக்னிபத் திட்டத்தின்கீழ் வீரா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

SCROLL FOR NEXT