இந்தியா

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்: யோகி ஆதித்யநாத்

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

DIN

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

நிலத்தடி நீர் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். 

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “ஆறுகள் மற்றும் ஏரிகளைப் புதுப்பிக்க வேண்டும். மக்கள் தண்ணீரை சிக்கனமாகவும், தங்களது அவசியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். உத்தரப் பிரதேச அரசு கடந்த 5 ஆண்டு ஆட்சியில் 60 ஆறுகளை புதுப்பித்துள்ளது. அனைவரும் ஒவ்வொரு துளி நீரின் மதிப்பினையும் அறிந்து பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். பழைய ஏரிகள், குளங்கள் மற்றும் கிணறுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் தொழிற்சாலைகளின் உருவாக்கம் தண்ணீர் தேவையை அதிகரித்து அதற்கான பற்றாக்குறையை இன்று ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகிறது. அந்தப் பகுதிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் 60 ஆறுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் விவசாயத்தின் முதுகெலும்பு ஆகும். இந்த ஆறுகளை முன்னாள் ஆட்சி செய்தவர்கள் சரிவர  பராமரித்திருந்தால் இன்று தட்டுப்பாடு என்ற ஒன்றும் இருந்திருக்காது. நிலத்தடி நீர் வாரம் ஜூலை 16 தொடங்கி இன்று (ஜூலை 22) வரை நடைபெற்று வருகிறது.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் குடிநீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டவர்களை கௌரவப்படுத்தினார். மேலும், இந்த நிகழ்வில் நிலத்தடி நீருக்கான வரைபடம் ஒன்றையும் அவர் வெளியிட்டார். இந்த நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் ஜல் சக்தி துறை அமைச்சர் சுவதந்திரா தேவ் கலந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT