இந்தியா

திரெளபதி முர்முவை சந்தித்து வெங்கையா நாயுடு வாழ்த்து

PTI


நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரெளபதி முர்முவின் இல்லத்திற்குச் சென்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பதிவில்,

இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவுக்கு எனது வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு 15 நிமிடங்கள் நீடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வியாழனன்று நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து, நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

திரௌபதி முர்முவின் வெற்றிக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT