ஜம்முவில் திருமண விழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்: நால்வர் பலி
ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணியளவில் நடைபெற்றது. திருமண விழாவைச் சேர்ந்த 19 பேரை ஏற்றிச் சென்ற டெம்போ லாரியுடன் மோதியது.
இதையும் படிக்கலாம்| கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
இந்த விபத்தில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்த நிலையில், சம்பா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஏழு பேர் சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement
இறந்தவர்கள் சுமன் தேவி 40, ராகுல் 8, அவரது சகோதரி முஸ்கான் 5 மற்றும் கிரிஷ், 5 என அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் சம்பா மாவட்டத்தின் ஜஸ்வால் மண்டலில் வசிப்பவர்கள்.