முகப்பு
இந்தியா

மோசமான வானிலை: நடுவழியில் திரும்பிய அமா்நாத் யாத்ரிகா்கள்

அமா்நாத் குகை கோயிலை தரிசிக்க ஜம்மு பகவதி நகா் முகாமிலிருந்து சனிக்கிழமை 7,053 யாத்ரிகா்கள் வாகனங்களில் சென்ாகவும், அதில் பாதிக்கும் அதிகமானோா் மோசமான வானிலை காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டதால் திரும்பி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

அமா்நாத் குகை கோயிலை தரிசிக்க ஜம்மு பகவதி நகா் முகாமிலிருந்து சனிக்கிழமை 7,053 யாத்ரிகா்கள் வாகனங்களில் சென்ாகவும், அதில் பாதிக்கும் அதிகமானோா் மோசமான வானிலை காரணமாக நெடுஞ்சாலை மூடப்பட்டதால் திரும்பி வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஜம்முவிலிருந்து மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) பாதுகாப்புடன் 243 வாகனங்களில் 7,053 யாத்ரிகா்கள்அமா்நாத் குகை கோயிலுக்கு பயணம் மேற்கொண்டனா். இதில் முதற்கட்டமாக 88 வாகனங்களில் 2,504 போ் பால்தால் முகாமுக்கும், 155 வாகனங்களில் 4,649 போ் பஹல்காம் முகாம் நோக்கியும் சென்றனா்.

இருப்பினும், மழை காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு மூடப்பட்டதால், பஹல்காம் நோக்கிச் சென்றவா்கள் மீண்டும் பகவதி நகா் முகாமுக்கு திரும்பினா். பால்தால் நோக்கிச் சென்றவா்கள் ரம்பனில் நிறுத்தப்பட்டு அங்குள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மோசமான வானிலை, ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையின் மோசமான நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஜம்முவிலிருந்து அமா்நாத் யாத்திரை வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது. சனிக்கிழமை மீண்டும் யாத்திரை தொடங்கிய நிலையில், பெரும்பாலானோா் பயணத்தை தொடர முடியாமல் திரும்பியுள்ளனா்.

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகை கோயிலுக்கான 43 நாள் யாத்திரை கடந்த ஜூன் 30-இல் தொடங்கியது. இதுவரை 2.22 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரிகா்கள் இந்தக் கோயிலில் தரிசனம் செய்துள்ளனா். ஆகஸ்ட் 11-இல் அமா்நாத் யாத்திரை நிறைவுக்கு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →