இந்தியா

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது

DIN

மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில் அம்மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநிலப் பள்ளி பணிகள் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியா்கள் மற்றும் குரூப் சி, டி ஊழியா்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகாா் எழுந்தது. 

இதுகுறித்து உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரிக்கிறது.

இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜியின் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். 

பார்த்தா சட்டர்ஜி தற்போது தொழில் மற்றும் வா்த்தக துறை அமைச்சராக இருக்கிறார்.

ஆசிரியா் நியமன முறைகேடு தொடா்பாக, பாா்த்தா சட்டா்ஜியிடம் கடந்த ஏப்ரல் 26, மே 18 ஆகிய தேதிகளில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT