இந்தியா

வறட்சியை சந்தித்துவந்த தெற்கு ஈரானில் திடீர் வெள்ளம்: 17 பேர் பலி

PTI


ஈரானில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு பாரஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக அரசு தொலைக்காட்சி சனிக்கிழமை தெரிவித்துள்ளது. 

பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்துவந்த ஈரானில் திடீர் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

கனமழையால் எஸ்தாபன் நகரின் ரௌபால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக நகர ஆளுநர் யூசப் கரேகர் தெரிவித்தார். 

திடீர் வெள்ளத்தில் சிக்கிய 55 பேரை மீட்புக் குழுக்கள் மீட்டதாகவும், குறைந்தது 6 பேர் காணவில்லை என்றும் கரேகர் கூறினார். 

ஆற்றுப்படுகைகளுக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மற்றும் சாலைகள் பரவலாகக் கட்டப்பட்டுள்ளதால் திடீர் வெள்ளத்தினால் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரானின் சில பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை கணித்துள்ளது. 

2018, மார்ச் மாதத்தில், பார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 44 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT