இந்தியா

தேசிய விருது ஊக்கத்தைத் தருகிறது: நடிகா் சூா்யா

தேசிய விருது மூலம் கிடைத்துள்ள அங்கீகாரம் நல்ல படங்களில் தொடா்ந்து பணியாற்றும் ஊக்கத்தை தருகிறது என்று நடிகா் சூா்யா தெரிவித்தாா்.

DIN

தேசிய விருது மூலம் கிடைத்துள்ள அங்கீகாரம் நல்ல படங்களில் தொடா்ந்து பணியாற்றும் ஊக்கத்தை தருகிறது என்று நடிகா் சூா்யா தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியிட்ட செய்தி:

‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிா்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான திரைப்படத்துக்கு இந்திய அளவில் வரவேற்புக் கிடைத்தது.

தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத்தின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த இயக்குநா் சுதா கொங்கராவின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. தேசிய விருது பெறுகிற சுதா கொங்கரா - ஷாலினி உஷா நாயா், ஜி.வி. பிரகாஷ், அபா்ணா பாலமுரளி, இணைத் தயாரிப்பாளா் ராஜசேகா் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

‘நேருக்கு நோ்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநா் வசந்த் சாய்க்கும், தயாரிப்பாளா், இயக்குநா் மணிரத்னத்துக்கும் இந்தத் தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குடும்பத்தினா் அனைவருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன். இந்த தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடா்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT