முகப்பு
இந்தியா

ரூ.100 கோடி கொடுத்தால் எம்.பி., ஆளுநர் பதவி: புதிய மோசடி அம்பலம்

ரூ.100 கோடி கொடுத்தால் மாநிலங்களவை உறுப்பினர் அல்லது ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக நடைபெற்ற மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் சிபிஐ, நான்கு பேரை கைது செய்துள்ளது.

Updated On : 25 ஜூலை, 2022 at 3:15 PM
ரூ.100 கோடி கொடுத்தால் எம்.பி., ஆளுநர் பதவி: புதிய மோசடி அம்பலம்
பகிர்:


புது தில்லி: பல மாநிலங்கள் சம்பந்தப்பட்ட, ரூ.100 கோடி கொடுத்தால் மாநிலங்களவை உறுப்பினர் அல்லது ஆளுநர் பதவி பெற்றுத் தருவதாக நடைபெற்ற மோசடியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் சிபிஐ, நான்கு பேரை கைது செய்துள்ளது.

இதுதொடர்பாக அண்மையில் சிபிஐ, பல இடங்களில் சோதனை நடத்தியது. இதில் தொடர்பிருக்கும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சோதனையின்போது ஒரு நபர் சிபிஐ அதிகாரிகளைத் தாக்கிவிட்டு தப்பிடியோவிட்டார். அவர் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் அதிகாரிகளைத் தாக்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மகாராஷ்டிரம், கர்நாடகம், தில்லி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தன்னை சிபிஐ அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டு, மிகப்பெரிய வழக்குகளை ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் முடித்துக் கொடுப்பதாகக் கூறி பலரையும் ஏமாற்றி பண மோசடி செய்து வந்துள்ளது தெரிய வந்தது.

இது மட்டுமல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்றுத் தருவதாகவும், ஆளுநர் பதவியை வாங்கித் தருவதாகவும் கூறி தனிநபர்கள் பலரையும் ஏமாற்றியிருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.