குடியரசுத்தலைவராக பதவியேற்க உள்ள திரௌபதி முர்மு தில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
புதிய குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று பதவியேற்கிறாா். பதவியேற்பு நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. திரௌபதி முா்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைப்பாா். அதைத் தொடா்ந்து 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்படும். பின்னா் திரௌபதி முா்மு உரையாற்றுவாா்.
இதையும் படிக்க- சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஆய்வகக் கலம் அனுப்பியது சீனா
நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், பிற துறை தலைவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
64 வயதாகும் திரெளபதி முா்மு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்து குடியரசுத் தலைவா் பதவிக்கு வரும் முதல் தலைவராகவும் உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.