இந்தியா

தில்லியில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது!

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

DIN

தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

விஜய் சவுக்கில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் மனு கொடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், விஜய் சவுக் பகுதியில் ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசாருக்கும் எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

இதையடுத்து, ராகுல் காந்தி உள்பட எம்.பி.க்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். ராகுல் காந்தியுடன் 50 எம்.பி.க்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளார்.

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்: கேரள முதல்வர் இல்லம், நீதிமன்ற வளாகத்தில் சோதனை

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

SCROLL FOR NEXT