இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணி!

சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

DIN

சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரை எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். புலனாய்வு அமைப்பான அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். 

முன்னதாக, நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அமலாக்கத் துறை முன்பாக இன்று இரண்டாவது நாளாக ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 

அமலாக்கத் துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடிகுண்டு மிரட்டல்: கேரள முதல்வர் இல்லம், நீதிமன்ற வளாகத்தில் சோதனை

ஜெரூசலேமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி!

பாஜகவிலிருந்து விலகிய புதுச்சேரி முன்னாள் தலைவர்!

ஜிஎஸ்டி குறைப்பு: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விலையில் மாற்றம்!

ஓடிடியில் கவனம் பெறும் பன் பட்டர் ஜாம்!

SCROLL FOR NEXT