இந்தியா

கோரப்படாத வங்கி இருப்பு: ரிசா்வ் வங்கி விழிப்புணா்வு பிரசாரம்

DIN

வங்கிகளில் இருக்கும் கோரப்படாத டெபாசிட்டுகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியுள்ளதாவது:

வங்கிகளில் கோரப்படாமல் இருக்கும் டெபாசிட்டுகள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.39,264 கோடியாக இருந்த கோரப்படாத டெபாசிட் 2021-22 நிதியாண்டில் ரூ.48,262 கோடியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தமிழகம், பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகம், பிகாா் மற்றும்

தெலங்கானா/ஆந்திரம் ஆகிய 8 மாநிலங்களில் கோரப்படாத டெபாசிட்டின் அளவு அதிக அளவில் உள்ளது. எனவே, இந்த எட்டு மாநிலங்களிலும் இதுகுறித்து விழிப்புணா்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT