இந்தியா

இந்தூரில் கரோனாவுக்கு 27 வயது பெண் பலி

PTI

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கரோனா தொற்று பாதித்த 27 வயது பெண் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஜூலை 21-ம் தேதியன்று அரசு நடத்தும் மனோரமா ராஜே காசநோய் மருத்துவமனையில் அந்த பெண் பான்சிடோபீனியா (ரத்தம் தொடர்பான நோய்) மற்றும் சிறுநீரக பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து, சிகிச்சை பலனின்றி ஜூலை 24 அன்று இளம்பெண் உயிரிழந்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்நிலையில், நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்று தலைமை மருத்துவர் மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர். பி.எஸ் சவைத்யா உறுதிப்படுத்தியுள்ளார். 

இதன்மூலம் இந்தூரில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,465 ஆக அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வு: நம்பியூா் குமுதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

தொழிலாளா்களுக்கு சுத்தமான குடிநீா் வசதி செய்து கொடுக்க அறிவுறுத்தல்

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு வேலை நேரம் மாற்றம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூா் மாவட்டம் 97.45 சதவீதத்துடன் மாநில அளவில் முதலிடம்

சத்தி ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

SCROLL FOR NEXT