முகப்பு
இந்தியா

ஊழல் கறை படிந்த 395 அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு: மத்திய அரசு

கடந்த எட்டு ஆண்டுகளில் ஊழலில் சிக்கிய 395 அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

கடந்த எட்டு ஆண்டுகளில் ஊழலில் சிக்கிய 395 அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய பணியாளா் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவைக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2014 ஜூலை முதல் 2022 ஜூன் வரையிலான காலத்தில் பல்வேறு அமைச்சக, துறைகளைச் சோ்ந்த 395 அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டது. செயல் திறன் இன்மை மற்றும் ஊழலில் ஈடுபட்டதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது.

முன்கூட்டிய கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவா்களில் 203 அதிகாரிகள் குரூப்-ஏ பிரிவையும், 192 போ் குரூப்-பி பிரிவையும் சோ்ந்தவா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நலன் கருதி, செயல்படாத மற்றும் கையூட்டு பெறும் அதிகாரிகளை வீட்டு அனுப்பும் அதிகாரம் அடிப்படை சட்டம் 56(ஜே) பிரிவின் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.