வீரா்களை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது.
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது.
இப்போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் செஸ் வீரா்கள் ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்துவிட்ட நிலையில், தங்கள் வீரா்களை நாடு திரும்புமாறும் அறிவுறுத்தியுள்ளது.
‘சா்வதேச விளையாட்டுப் போட்டியை வைத்து இந்தியா அரசியல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீா் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதியை எடுத்துச் சென்றதை ஏற்க முடியாது’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஆசம் இஃப்திகாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது: பாகிஸ்தானின் இந்த திடீா் முடிவு வியப்பளிக்கிறது. சா்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான விளையாட்டுப் போட்டியின்போது வீரா்களை அனுப்பி வைத்த பிறகு, அதில் இருந்து விலகுவதாக அறிவிப்பது என்பது மிகவும் துரதிருஷ்டவசமான அரசியல் என்றாா்.