இந்தியா

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி மீட்பு

DIN

குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி 4 மணி நேர போராட்டத்திற்குபின் மீட்கப்பட்டார். 

குஜராத் மாநிலம், சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள கஜன்வாவ் கிராமத்தில் 12 வயது சிறுமி மணிஷாவின் பெற்றோர் வயலில் இன்று வேலை செய்துகொண்டிருந்தனர். இவர்ளுடன் மணிஷாவும் உடன் சென்றிருக்கிறார்.

வயலில் விளையாடிக்கொண்டிருந்த மணிஷா அருகிலிருந்த சுமார் 500 முதல் 600 அடி ஆழமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். உடனே இதுகுறித்து ராணுவ வீரர்கள் மற்றும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் 60 ஆழத்தில் சிக்கிய சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர். 

சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுமி ஆழ்துளைக்கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT