இந்தியா

சட்ட விரோத மதுக்கூடம் வழக்கு: காங். தலைவர்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன்

DIN

மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக மதுக்கூடம் (பாா்) விடுதி நடத்துவதாகக் கூறிய காங்கிரஸ் கட்சியின் பவன் கோரா, எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், நெட்டா டிசோசா ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

கோவாவில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக மதுக்கூடம் (பாா்) விடுதி நடத்துவதாகவும், இதனால் ஸ்மிருதி இரானியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கேரா, மக்களவை எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்து சட்ட விரோத மதுக்கூடம் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து, ஸ்மிருதி ராணி தரப்பிலிருந்து தில்லி உயர்நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இன்று வழக்கை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம்  பவன் கோரா, எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், நெட்டா டிசோசா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியதுடன் அவர்கள் அனைவரும் தங்களுடைய சமூக ஊடக தளங்களிலிருந்து மதுக்கூடம் தொடர்பாக பதிவு செய்த கருத்துகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் உத்தரவு  விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT