இந்தியா

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கம்: சாதித்த மீராபாய் சானு

DIN

காமன்வெல்த் தொடரின் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 

இங்கிலாந்து நாட்டில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் இந்திய அணியின் சார்பில் யாரும் பதக்கங்களைப் பெறாத நிலையில் இன்று இந்தியா தனது பதக்கக் கணக்கைத் துவங்கியுள்ளது.

மகளிர் பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார். நடப்பு காமன்வெல்த் போட்டியில் இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். 

முன்னதாக ஆடவருக்கான 61 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெண்கலம் வென்றார். இந்திய வீரர் குருராஜா மொத்தம் 269 கிலோ எடையை தூக்கி 3ஆம் இடம் பிடித்தார்.

55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சங்கேத் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT