இந்தியா

உயிரோடு இருக்கும் பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதால் நேர்ந்த கதி

DIN


ஹிஸார்: ஹரியாணா மாநிலம் ஹிஸார் மாவட்டத்தில் புதி சமைன் கிராமத்தைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் உயிரோடு இருக்கும் நிலையில், இறந்துவிட்டதாக அரசு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அவர் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியே மரணமடைந்துவிட்டதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரோடு இருக்கும் ஒருவர் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டது ஏன்? எப்படி? என்பது மிகவும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வேளை, அந்த 85 வயது மூதாட்டி ஃபுலா தேவி படுத்த படுக்கையாகவோ வீட்டை விட்டு வெளியேறவே முடியாத நிலையிலோ இருக்கலாம் என்று நினைத்தால் அதுவும் தவறு. நன்றாக ஓடியாடி வேலை செய்யும் அளவுக்கு நலத்தோடுதான் இருக்கிறாராம்.

உயிரோடு இருக்கும் தான் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டிருப்பதை, அந்த மூதாட்டி, தனது மாத ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு மே 6ஆம் தேதி வங்கிக்குச் சென்ற போது, வங்கி அதிகாரிகள் கூறிய போதுதான் அறிந்துகொண்டார்.

இது குறித்து சமூக நலத் துறை அதிகாரிகளிடம் ஜூன் மாதம் புகார் அளித்த அவர், பிறகு முதலமைச்சரின் புகார் மனு பெறும் மையத்திலும் தனது புகாரை பதிவு செய்தார். ஆனால், தான் உயிரோடு இருப்பதை அரசு ஆவணங்களில் உறுதி செய்ய போராடிக் கொண்டிருந்தார்.

ஃபுலா தேவியின் மகன் பனு கூறுகையில், எனது தாய் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலிருந்து அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, எந்த ஆதாரமும் இல்லாமல் தான் இறந்துவிட்டதாகப் பதிவு செய்த அதிகாரி யார்? அதற்குக் காரணம் என்ன? எனது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மூதாட்டி ஃபுலா தேவி வலியுறுத்தினார். மாத ஓய்வூதியம் கிடைக்காமல் தான் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

முதலமைச்சரின் புகார் மையத்துக்கு அனுப்பப்பட்ட மனுவையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. அதில், ஜூன் 8ஆம் தேதி ஃபுலா தேவி இறந்துவிட்டதாக தலைமையகத்துக்கு வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, இந்திய மக்கள் தொகை ஆணையத்தில் ஃபுலா தேவி இறந்துவிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொலைபேசி வாயிலாக மூதாட்டி உயிரோடு இருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதும்  ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

3 சிறாா் உள்ளிட்ட 7 போ் கைது: 60 பவுன் நகைகள் பறிமுதல்

SCROLL FOR NEXT