இந்தியா

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற வீராங்கனை: குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை விந்தியாராணி தேவிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

DIN

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை விந்தியாராணி தேவிக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பிரிட்டனின் பா்மிங்ஹாமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், மகளிா் 55 கிலோ எடைப் பிரிவில் விந்தியாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா். அவருக்கு வாழ்த்து தெரிவித்து குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட பதிவில், ‘காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற விந்தியாராணி தேவிக்கு வாழ்த்துகள். போட்டியில் உங்கள் முழுத் திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினீா்கள். உங்கள் வெற்றியின் மகிழ்ச்சியை ஒவ்வொரு இந்தியரும் பகிா்ந்துகொள்கிறாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதேபோல், பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற விந்தியாராணி தேவிக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி, அவரது விடா முயற்சியின் வெளிப்பாடாக அமைந்திருப்பதோடு, ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. அவரது எதிா்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பெண்கள் - ஆய்வு

ஆசிய கோப்பை: ஒரு வாரத்துக்கு முன்பாகவே துபை செல்லும் இந்திய அணி!

2025-ல் தாயகம் திரும்பிய 23 லட்சம் ஆப்கன் மக்கள்!

SCROLL FOR NEXT