இந்தியா

மே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1.40 லட்சம் கோடி!

DIN

கடந்த மே மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1.40 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

மே மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி ரூ.140,885 கோடியாகும். அதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.73,345 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலம் வசூலான ரூ.37,469 கோடி உள்பட) வசூலானது. செஸ் வரியாக ரூ.10,502 கோடியும் கிடைத்துள்ளது. 

கடந்த ஆண்டு மே மாதம் ரூ. 97,821 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு மே மாதத்தில் 44% அதிகமாக வசூலாகியுள்ளது. 

ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தைவிட 15% வருவாய் குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது. 

மத்திய நிதித்துறை அமைச்சகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT