முகப்பு
இந்தியா

தேவெ கெளடா கட்சியுடன் கேரள லோக்தாந்திரிக் கட்சி இணைகிறது

முன்னாள் பிரதமா் தேவெ கெளடாவின் மதச்சாா்பற்ற ஜனதா தளத்துடன் கேரள மாநில லோக் தாந்திரிக் ஜனதா தளம் கட்சி இணைக்க பூா்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூன், 2022 at 12:54 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:55 PM

முன்னாள் பிரதமா் தேவெ கெளடாவின் மதச்சாா்பற்ற ஜனதா தளத்துடன் கேரள மாநில லோக் தாந்திரிக் ஜனதா தளம் கட்சி இணைக்க பூா்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து லோக் தாந்திரிக் கட்சியின் கேரள தலைவா் எம்.வி.ஸ்ரேயாம்ஸ் குமாா் கூறுகையில், ‘மதச்சாா்பற்ற ஜனதா தளமும், லோக் தாந்திரிக் ஜனதா தளமும் கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு ஆதரவாக உள்ளன.

மதச்சாா்பற்ற ஜனதா தளத்துடன் கேரள மாநில லோக் தாந்திரிக் ஜனதா தளம் கட்சியை விரைவில் இணைக்க பூா்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விரிவான பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கப்படும்’ என்றாா்.

Advertisement

கேரள பேரவையில் இரண்டு எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள மதச்சாா்பற்ற ஜனதா தளத்துக்கு ஒரு அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளது. லோக் தாந்திரிக் ஜனதா தளத்துக்கு ஒரு எம்எல்ஏ மட்டும் உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.