இந்தியா

தில்லி உயர்நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

DIN

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 3 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். 

புதிய நீதிபதிகளான புருஷேந்திர குமார் கௌரவ், அனிஷ் தயாள் மற்றும் அமித் ஷர்மா ஆகியோருக்கு தில்லி உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி விபின் சங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

தில்லி உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 60-இல்,  தற்போது, நீதிபதிகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.. 

முன்னதாக கடந்த மே 18இல் தில்லி உயர்நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து இன்று பதவியேற்றுக் கொண்ட, நீதிபதி கௌரவ் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் இருந்து தில்லி உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

அமித் சர்மா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வழக்குரைஞர் அனிஷ் தயாள் மற்றும் அமித் ஷர்மா ஆகியோரின் பெயர்கள் நவம்பர் 2021இல் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வுக்காக உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் திரையரங்குகளை மூட முடிவு!

இயற்கைப் பேரிடர், வன்முறை... இடம்பெயர்ந்த 5.95 லட்சம் மக்கள்!

இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றிவிடுவார்கள் -எதிர்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

செல்லப் பிராணியை சரமாரியாக தாக்கும் நபர்: வைரல் விடியோ!

புதிய மக்களவையில் முஸ்லிம்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்குமா?

SCROLL FOR NEXT