முகப்பு
இந்தியா

குரங்கு அம்மை பாதிப்பு 550-ஆக அதிகரிப்பு

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 550-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 550-ஆக உயா்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே 30 நாடுகளில் இதுவரை 550-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 1970-களிலேயே ஆப்பிரிக்காவில் அந்த நோய் கண்டறியப்பட்டாலும், தற்போது அந்தப் பிராந்தியத்துக்கு நேரடியாக செல்லாத ஐரோப்பியா்களுக்கும் குரங்கு அம்மை பரவி வருவது நிபுணா்களை குழப்பமடையச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.