இந்தியா

வடக்கு வஜிரிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை

DIN

நாட்டின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஜூன் 1-2 அன்றிரவு, வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தின் தத்தா கெல் பொதுப் பகுதியில் உள்ள ராணுவச் சாவடியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

கடுமையான துப்பாக்கிச் சூட்டில், 28 வயதுடைய இளம் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். அப்பகுதியில் பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா நகரில் வசிப்பவர் ஹமீத் அலி (28) என தெரிய வந்தது.

அண்மைக் காலமாக பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் குறிப்பாக வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் மொத்தம் 105 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், இதில் 97 வீரர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் என பாகிஸ்தான் வெர்னாகுலர் மீடியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT