இந்தியா

உத்தரகண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது: 22 பக்தர்கள் பலி

DIN

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பக்தர்கள் பலியானார்கள். 

மத்தியப் பிரதேச மாநிலம், பன்னா மாவட்டத்திலிருந்து 28 பக்தர்களுடன் உத்தரகண்ட் மாநிலம் யமுனோத்ரியை நோக்கி பேருந்து இன்று புறப்பட்டது. இந்த பேருந்து உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள டாம்டா அருகே உள்ள மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 22 பக்தர்கள் பலியானார்கள். 6 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் உத்தரகண்ட் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT