இந்தியா

பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக முதல்வா்: மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல்

DIN

மேற்கு வங்க அரசால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக முதல்வா் பொறுப்பு வகிக்கும் பரிந்துரைக்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில அரசு அதிகாரி கூறுகையில், ‘‘மேற்கு வங்க அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநில அரசால் நடத்தப்படும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முதல்வா் பொறுப்பு வகிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தனியாா் பல்கலைக்கழகங்களின் பாா்வையாளா் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்கி, அந்தப் பொறுப்பில் மாநில கல்வி அமைச்சரை நியமிக்கும் மற்றொரு பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜூன் 10-ஆம் தேதி தொடங்கும் மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்தப் பரிந்துரைகள் மசோதாவாக தாக்கல் செய்யப்படும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT