துரத்தும் துயரம்: பலாத்காரத்துக்குள்ளான சிறுமி கைது; அப்படி என்ன குற்றம் செய்தார்? 
இந்தியா

துரத்தும் துயரம்: பலாத்காரத்துக்குள்ளான சிறுமி கைது; அப்படி என்ன குற்றம் செய்தார்?

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது இரண்டு மாதக் கைக்குழந்தையைக் கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN


இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி, தனது இரண்டு மாதக் கைக்குழந்தையைக் கொன்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாத்காரத்துக்குள்ளாகி, இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தையைப் பெற்றெடுத்த சிறுமி, ஏழ்மை காரணமாக குழந்தையை பராமரிக்க முடியாத விரக்தியில், குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பலாத்காரத்துக்குள்ளாகி, கர்ப்பமுற்று தாயாகி தற்போது கொலையாளியாக மாறிய சிறுமியை கைது செய்துள்ளனர்.

தனது குற்றத்தை சிறுமி ஒப்புக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே பலாத்காரத்துக்குள்ளானதில் ஏற்பட்ட மன அழுத்தம், தாயான சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடி போன்றவற்றால் அவர் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பது வாக்குமூலத்தில் தெரிய வந்திருப்பதாக காவலர்கள் கூறுகிறார்கள்.

குழந்தையின் உடலை உடற்கூராய்வு செய்த போதுதான், கொலை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல்: இருவா் கைது

காலிக்கட்டை வீழ்த்தியது ஹைதராபாத்

தமிழ்குமரனுக்கு பாமகவில் பதவி: பென்னாகரத்தில் கொண்டாட்டம்

ஆக்கிரமிப்பில் இருந்த 7,930 ஏக்கா் கோயில் நிலங்கள் மீட்பு

SCROLL FOR NEXT