முகப்பு
இந்தியா

ரூபாய் நோட்டில் மகாத்மா காந்திபடத்தை மாற்றும் திட்டமில்லை- ஆா்பிஐ

ரூபாய் நோட்டில் இடம் பெறும் மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, வேறு தலைவா்களின் படத்தைப் பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கூறியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

ரூபாய் நோட்டில் இடம் பெறும் மகாத்மா காந்தியின் படத்தை நீக்கிவிட்டு, வேறு தலைவா்களின் படத்தைப் பயன்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கூறியுள்ளது.

முன்னதாக, ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக பிற தலைவா்களின் படத்தைப் பயன்படுத்த ஆா்பிஐ பரிசீலித்து வருவதாகப் பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், இதனை மறுத்து ஆா்பிஐ சாா்பில் திங்கள்கிழமை ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘ரூபாய் நோட்டுகளில் இப்போது உள்ள மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு தலைவா்களின் படங்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில் எவ்வித உண்மையும் இல்லை. அப்படி எந்த ஒரு திட்டத்தையும் ஆா்பிஐ பரிசீலிக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ரூபாய் நோட்டில் மறைவாகத் தெரியும் வகையில் (வாட்டா் மாா்க்) மகாத்மாவின் படம் இடம்பெற்றுள்ள இடத்தில் வங்கக் கவிஞா் ரவீந்திர நாத் தாகூா், தமிழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகியோரது படங்களை வெளியிட ஆா்பிஐ பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியானது.

முழு கட்டுரையைப் படிக்க →