இந்தியா

சியோலில் இரவு நேர சுரங்கப்பாதை சேவை ஆகஸ்டில் மீண்டும் தொடக்கம்

DIN

சியோலில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் இரவு நேர சுரங்கப்பாதை சேவைகள் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது. 

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு நேர சுரங்கப்பாதை செயல்படாத நிலையில், தற்போது மீண்டும் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை ஆப்ரேட்டர்கள் இன்று வெளியிட்டனர். 

தலைநகரில் உள்ள சுரங்கப்பாதை சேவைகளின் ஆபரேட்டர்களான சியோல் மெட்ரோ மற்றும் கோரைலின் கூற்றுப்படி, 

வார நாளில் லைன் 1 இன் இயக்க நேரம் ஜூலை 1 முதல் நள்ளிரவு அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்படும், அதே நேரத்தில் 3 மற்றும் 4 லைன் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில், சுரங்கப்பாதை சேவைகள் முன்பு போலவே நள்ளிரவு வரை இயங்கும்.

லைன் 2 மற்றும் லைன் 5-8 ஆகியவை செவ்வாய்க்கிழமை தாமதமாகச் சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தலைநகர் பகுதியில் நான்கு வழி ரயில் பாதைகள், சுயின்-பண்டாங் லைன் உள்பட, ஜூலை 1 ஆம் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சேவை ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

SCROLL FOR NEXT