இந்தியா

சத்தீஸ்கரில் பானிபூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி பலி: 18 பேர் பாதிப்பு

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம சந்தையில் பானிபூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராம சந்தையில் பானிபூரி சாப்பிட்ட 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

பில்ஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவ்கிராரி கிராமத்தில் திங்களன்று இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 

முதற்கட்ட தகவலின்படி, பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிறன்று கிராம சந்தையில் தள்ளு வண்டி விற்பனையாளரிடமிருந்து பானிபூரி என்று அழைக்கப்படும் குப்சூப் சாப்பிட்டுள்ளனர். அடுத்த நாள் வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறுவர்கள் ஆவர். திங்கள் இரவு 4 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பில்ஹா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர், உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில்  பிலாஸ்பூரில் உள்ள சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு கொண்டு சென்றனர். 

பாதிக்கப்பட்ட நான்கு பேரில், மீனாஸ்கி கோஷ்லே என்ற சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் 17 பேர் சமூக சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார். 

சரியான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணை நடந்துவருகிறது என்று மாவட்டத்தின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பிரமோத் மகாஜன் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

கிருஷ்ணகிரியில் தீண்டாமை ஒழிப்பு: முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம்

புகையிலா போகி: திருவள்ளூா் ஆட்சியா் வேண்டுகோள்

திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

விழுப்புரம் நகராட்சிப் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

SCROLL FOR NEXT