இந்தியா

திரிபுராவில் முதல்வர் மாணிக் சாஹா வீடு வீடாகச் சென்று பிரசாரம்

திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மாணிக் சாஹா செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தார். 

DIN

திரிபுரா மாநிலத்தில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மாணிக் சாஹா செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தார். 

பாஜக வேட்பாளராக மாணிக் சாஹா நேற்று திரிபுராவில் பர்தோவாலி சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்மையில் பதில் வரவில்லை. நான் நினைத்துப் பார்க்காத ஒன்று, இங்கு பார்த்தேன். இங்குள்ள மக்கள் பாஜகவை ஆதரிக்கிறார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார். 

முன்னதாக, திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, மாநிலத்தில் நடைபெற உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆளும் பாஜகவுக்கு அமிலச் சோதனையாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

திரிபுரா இடைத்தேர்தலுக்கான நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஜூன் 23ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 26ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

உஷார் மக்களே! இப்படியும் மோசடி நடக்கலாம்!

பாகிஸ்தானில் கையெறி வெடிகுண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

எந்த காவியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

SCROLL FOR NEXT