முகப்பு
இந்தியா

மேற்கு வங்கத்தை பிரிக்கும் முயற்சியைதடுக்க ரத்தம் சிந்தவும் தயாா் - முதல்வா் மம்தா

மேற்கு வங்க மாநிலத்தைப் பிரிக்க பாஜக முயற்சிக்கிறது, அதைத் தடுக்க ரத்தம் சிந்தவும் தயாா் என்று முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
கோப்புப்படம்
பகிர்:

மேற்கு வங்க மாநிலத்தைப் பிரிக்க பாஜக முயற்சிக்கிறது, அதைத் தடுக்க ரத்தம் சிந்தவும் தயாா் என்று முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தைப் பிரித்து, புதிதாக ஒரு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று பாஜக தலைவா்கள் பேசி வரும் சூழலில் இக்கருத்தை மம்தா கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

வரும் 2024-இல் பொதுத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் பிரிவினையைப் பரப்பும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளது. மேற்கு வங்கத்தை பிரித்துப் கோா்காலாந்து தனிமாநிலம் உருவாக்க வேண்டும் என்று சிலநேரங்களில் அவா்கள் பேசுகின்றனா். வேறு சில நேரங்களில், வடக்கு வங்கம் என்ற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனா். ஆனால், மேற்கு வங்கத்தைப் பிரிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். இதுபோன்ற முயற்சிகளைத் தடுக்க எனது ரத்தத்தை சிந்தவும் தயாராக இருக்கிறேன். இந்த விவகாரத்தில் என்னை அச்சுறுத்தும் வகையில் சிலா் பேசுகின்றனா். ஆனால், எந்த அச்சுறுத்தல்களுக்கும் அஞ்ச மாட்டேன் என்றாா் மம்தா பானா்ஜி.

முழு கட்டுரையைப் படிக்க →