ஆம்பூர் அருகே நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது 
இந்தியா

ஆம்பூர் அருகே நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது

ஆம்பூர் அருகே நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது 

DIN


ஆம்பூர் அருகே நள்ளிரவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பத்தூர்  மாவட்டம், ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த சபியுல்லா என்பவருக்கு சொந்தமான கார் வாடகைக்கு சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். காரை ஆயிஷாபீ நகர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் நவாஸ் என்பவர் சென்னைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் வந்த போது காரில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் நண்பர் ஒருவர் மூலம் இரு சக்கர வாகனத்தின் மூலம் காரை டோக் செய்து வந்ததாகவும் அப்போது கன்னிகாபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது காரிலிருந்து புகை வருவதை அறிந்து உடனடியாக ஓட்டுநர் இறங்கிப் பார்ப்பதற்குள் கார் தீப்பிடிக்க தொடங்கி மளமளவென எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆம்பூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். 

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரியும் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும், கார் எரிந்து முற்றிலும் சேதமானது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிவியல்,பொறியியல் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!

நட்பு ரீதியான போட்டியில் சரமாரியாகத் தாக்கிக்கொண்ட கால்பந்து வீரர்கள்!

ரயில்வேயில் வேலை வேண்டுமா?: விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு!

இப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் பாக்கியராஜை நினைப்பேன்: ஊர்வசி

SCROLL FOR NEXT