ஜம்மு-காஷ்மீர்: பதேர்வா நகரில் தொடரும் ஊரடங்கு, இணையம் முடக்கம்
ஜம்மு-காஷ்மீரில் வகுப்புவாத வன்முறையை தூண்டுவதாக, முக்கிய நகரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதோடு, சில நகரங்களில் இணையச் சேவையையும் முடக்கியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் வகுப்புவாத வன்முறையை தூண்டுவதாக, முக்கிய நகரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதோடு, சில நகரங்களில் இணையச் சேவையையும் முடக்கியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை விதித்த அதிகாரிகள், அப்பகுதியில் வகுப்புவாத பதட்டத்தை உருவாக்கும் முயற்சிகளை முறியடிக்க வெள்ளிக்கிழமை பதேர்வா மற்றும் கிஷ்த்வார் நகரங்களில் இணைய சேவைகளை முடக்கினர்.
நகரத்தில் வகுப்புவாத வன்முறையைத் தூண்ட முயன்றதாக இரு சமூகத்தினரிடையே எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இரு சமூகத்தினரிடையே பதற்றத்தைத் தூண்டும் வகையில் உள்ளூர் மசூதியில் இருந்து சில தவறான அறிவிப்புகளை வெளியிட்டதால் வியாழக்கிழமை பதேர்வா நகரில் பிரச்னை வெடித்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் எப்ஐஅர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர்கள் குலாம் நபி ஆசாத் மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மக்கள் அமைதியாக இருக்கவும், அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உதவவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.