‘ஜிப்மேட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்
‘ஜிப்மேட்’ ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
‘ஜிப்மேட்’ ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் புத்தகயா, ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உள்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர மாணவா்கள் ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
வருகிற 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத்தோ்வு கணினிவழியில் ஜூலை 3-ஆம் தேதி மதியம் நடைபெறவுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு கடந்த மே 10-இல் தொடங்கி ஜூன் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவா்கள் வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களில் திருத்தங்கள் இருப்பின் ஜூன் 17, 18-ஆம் தேதிகளில் மேற்கொள்ளலாம். தோ்வுக்கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை தேசிய தோ்வுகள் முகமையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.