இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்: நிர்மலா சீதாராமன் வெற்றி

DIN


கர்நாடக மாநிலங்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் போட்டியிட்ட நிர்மலா சீதாராமன் உள்பட மூன்று பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 4 இடங்களுக்கு 6 பேர் போட்டியிட்டனர். இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோஜ்யா ஆகிய மூன்று பேரும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கட்சி 2 இடங்களுக்குப் போட்டியிட்டது. ஆனால், ஜெய்ராம் ரமேஷ் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.   

நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கர்நாடகத்திலிருந்து மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளனர்.

மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு இடத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளது. மதச்சார்பின்மை பெயரில் அந்தக் கட்சி கோரிய ஆதரவை காங்கிரஸ் நிராகரித்தது. இதனால், 4-வது இடத்துக்கு பாஜகவின் சிரோஜ்யா, காங்கிரஸின் மன்சூர் அலி கான் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் டி குபேந்திர ரெட்டி ஆகியோர் இடையிலான போட்டி விறுவிறுப்பாக இருந்தது.

கர்நாடகத்திலிருந்து மாநிலங்களவைக்கு ஏற்கெனவே தேர்வான பாஜகவின் நிர்மலா சீதாராமன் மற்றும் கே.சி. ராமமூர்த்தி மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரது பதவிக் காலம் ஜூன் 30-ம் தேதி நிறைவடைகிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்வாகியிருந்த ஆஸ்கர் பெர்னான்டஸ் கடந்தாண்டு உயிரிழந்தார். இதனால், கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT