இந்தியா

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

DIN

கரோனாவுக்குப் பிந்தைய தொந்தரவுகள் காரணமாக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தில்லியில் உள்ள சா் கங்காராம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் மருத்துவக் கண்காணிப்புக்காக சில நாள்கள் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பாா். அவா் விரைவில் குணமடைய வாழ்த்துகளைத் தெரிவித்த காங்கிரஸ் கட்சியினருக்கும் மற்றும் அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, சோனியா காந்தி வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்ாகத் தகவல்கள் வெளியாகின. 72 வயதாகும் சோனியா காந்திக்கு கடந்த 2-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலிருந்து அவா் குணமடைந்துள்ளாா்.

இதற்கிடையே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 8-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. கரோனா காரணமாக அன்றைய தினம் ஆஜராக முடியாது என்று கூறிய சோனியா காந்தி, அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்டிருந்தாா். இதையடுத்து, வரும் 23-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை புதிய அழைப்பாணை அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT