இந்தியா

மருத்துவமனையில் சோனியா காந்தியை சந்தித்த ராகுல், பிரியங்கா

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் மருத்துவமனை சென்றுள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிலிருந்து அவர் குணமடைந்தார். இதற்கிடையே, நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 8-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. கரோனா காரணமாக அன்றைய தினம் ஆஜராக முடியாது என்று கூறிய சோனியா காந்தி, அமலாக்கத் துறையிடம் அவகாசம் கேட்கவே வரும் 23-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் கரோனாவுக்குப் பிந்தைய தொந்தரவுகள் காரணமாக, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தில்லியில் உள்ள சா் கங்காராம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று பிற்பகல் மருத்துவமனையில் உள்ள சோனியா காந்தியைப் பார்ப்பதற்காக  ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் மருத்துவமனை சென்றனர். 

முன்னதாக நேஷனல் ஹெரால்டு வழக்கில்  ராகுல் காந்தி, அமலாக்கத்துறை முன்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.  காலையில் விசாரணை முடிந்தவுடன் அவர் சோனியா காந்தியை சந்திக்கச் சென்றார். இன்று பிற்பகலிலும் விசாரணை தொடர்வது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT