இந்தியா

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

DIN


அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்புடைய பணமோசடி வழக்கு குறித்து விசாரிக்கக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியாவை ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

இதுதொடர்பாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ராஜஸ்தானின் பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கட்சியின் மாநில தலைமையகத்தில் இருந்து அம்பேத்கர் வட்டம் அருகே உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் வரை அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. 

வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் போன்ற பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பவே மத்திய அரசு இதுபோன்ற யுக்திகளை கையாள்கிறது என்று தோதாஸ்ரா கூறினார்.

இந்த போராட்டத்தில் அமைச்சர்கள் பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், ரமேஷ் மீனா, பி.டி.கல்லா, ராம்லால் ஜாட், சகுந்த்லா ராவத், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT