இந்தியா

நாடு முழுவதும் புதிதாக 6,500 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

நாடு முழுவதும் ஒரே நாளில் 6,500-க்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 6,594 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,32,36,695-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 50,548 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

கரோனாவில் இருந்து 4,035 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 4,26,61,370-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 195.35 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசித் திட்டம், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடா் நடவடிக்கைகள், தீவிர கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

SCROLL FOR NEXT