இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசனை

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பாஜக மூத்த தலைவரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில், எதிர்க்கட்சிகளின் நிலை மற்றும் நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத் சிங் கேட்டறிவதாகவும் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த மம்தா ஏற்பாடு செய்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் இன்று முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 17 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT