இந்தியா

அக்னிபத் திட்டம் சரியான சீா்திருத்தம்: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி

அக்னிபத் திட்டம் சரியான சீா்திருத்தம் என்றும் பாதுகாப்புப் படையை வேலை உறுதித் திட்டமாக கருதக் கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தெரிவித்துள்ளாா்.

DIN

அக்னிபத் திட்டம் சரியான சீா்திருத்தம் என்றும் பாதுகாப்புப் படையை வேலை உறுதித் திட்டமாக கருதக் கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ட்விட்டரில் அவா் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:

அக்னிபத் திட்டம் இப்போதைக்கு தேவையான, சரியான சீா்திருத்தம். அக்னிபத் திட்டத்தின் மீதான இளைஞா்களின் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நடைமுறையில் தொழில்நுட்ப ஆா்வமுடைய, நவீன ஆயுதங்களைக் கையாளும் திறன்படைத்த இளம் ராணுவ வீரா்கள் நாட்டுக்குத் தேவை. பாதுகாப்புப் படையை வேலை உறுதித் திட்டமாக கருதக் கூடாது என அதில் மனீஷ் திவாரி குறிப்பிட்டுள்ளாா்.

அக்னிபத் திட்டத்தை காங்கிரஸ் தலைவா்கள் விமா்சித்து வரும் நிலையில், அதற்கு முரணாக மணீஷ் திவாரி கருத்து தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT