இந்தியா

ஆந்திரத்தில் 3 வயது சிறுமியை நரபலி கொடுத்த தந்தை கைது

ஆந்திரப் பிரதேசத்தில் பெற்ற மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

DIN

ஆந்திரப் பிரதேசத்தில் பெற்ற மகளை நரபலி கொடுக்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

நெல்லூர் மாவட்டம் பேரரெட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள வேணுகோபால் என்பவர் தனது தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு தீய சக்திகளே காரணம் என்று நம்பியுள்ளார். 

இதற்காக அவரது வீட்டில் தனது இரட்டை பெண் குழந்தைகளை வைத்து சில சடங்குகளை நடத்தியுள்ளார். சடங்குகளின் ஒரு பகுதியாக வேணுகோபால் தனது 3 வயது மகள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி, வாயில் குங்குமப் பொடியை அடைத்துள்ளார். இதனால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு மயங்கிக் கிடந்த சிறுமியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

சிறுமியின் உடல்நிலை மோசமானதால், சென்னையில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது. 

வேணுகோபால் மண் அள்ளும் தொழிலை நடத்தி வந்தார். தீய சக்திகளால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் நம்பியுள்ளார். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT