இந்தியா

'அக்னிபத்' எதிரொலி: ஹரியாணாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு

DIN

புது தில்லி: ஹரியாணாவின் குருகிராமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள்  எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிகார், உத்தர பிரதேசம், ஹரியாணா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் மூன்றாவது நாளாக நடந்த போராட்டங்கள் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 200 ரயில்களின் சேவை இன்று பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அக்னிபத் திட்டத்து எதிராக இளைஞர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்த, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க, ஆளும் பாஜக தரப்பினர் திட்டத்துக்கு ஆதரவுக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.

இந்தப் போராட்டம் பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்துள்ளன. ஹரியாணாவின்  சில பகுதிகளில் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத்துக்கு எதிரான போராட்டத்தால் தில்லி ஐடிஐ மெட்ரோ நிலையம் மூடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

SCROLL FOR NEXT