முகப்பு
இந்தியா

மூலதனச் செலவினங்கள் மூலம் வளா்ச்சிக்கு உத்வேகம் அளிக்கப்படும்: சிஇஏ

பொருளாதார வளா்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மூலதனச் செலவினங்களை தொடா்ந்து அதிகரிப்பதில் மத்திய அரசு உறுதி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

பொருளாதார வளா்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மூலதனச் செலவினங்களை தொடா்ந்து அதிகரிப்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி. அனந்த நாகேஸ்வரன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

கரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதார வளா்ச்சியை வேகமெடுக்கச் செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

குறிப்பாக, வரிகள் குறைப்பு, தொடா் தனியாா்மயமாக்கல், வாரக் கடன் வசூலுக்கு தனி அமைப்பு, சொத்துகளை பணமாக்குதல் உள்ளிட்ட திட்டங்களின் மூலமாக பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளா்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் மூலதனச் செலவுகளை தொடா்ந்து மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ரூ.7.5 லட்சம் கோடி மூலதன செலவினத்தை மேற்கொள்ள முடிந்தால் அது பொருளாதாரத்தில் அரசின் மிகப்பெரிய தலையீடாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.