முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 13 ஆயிரம் பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,216 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,216 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சமீபத்திய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 13,216 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை 12 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு, இன்று (சனிக்கிழமை) 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மேலும் 8,148 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 23 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,26,90,845 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,840 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி இன்னும் 68,108 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 2.73 சதவிகிதமாக உள்ளது.

தடுப்பூசி:

மேலும் 14,99,824 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 1,96,00,42,768 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.